பாலிவுட் திரையுலகில் ஸ்டைலிஷ் நடிகர் என அழைக்கப்படுவர் க்ரித்திக் ரோஷன். இவர் பலமுறை உலகிலேயே கவர்ச்சிமிக்க ஆண் என்கிற பட்டத்தையும் பெற்றவர்.
தற்பொழுது 45வயதை கடந்தும் அதே கட்டுடல் இளமை பொலிவுடன் வலம்வரும் இவர், தனக்கு வந்த திருமண வரன்கள் குறித்து முதன் முறையாக மனம் திறந்து இருக்கிறார்.
இது குறித்து டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், '2000'மாவது ஆண்டில் வெளியான கஹோ நா.. பியார் ஹே... எனும் திரைப்படத்தின் மூலம் அதிக பிரபலமடைந்தேன்.
அந்த பிரபலத்தினால் எனக்கு அதிக ரசிகைகளும் உருவாக்கினார். இதனால் சுமார் 30000க்கும் மேலான பெண்கள் என்னை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து தொடர்பு கொண்டனர்' என தெரிவித்து சிங்கிள் ஆண்களை வயிறெரிய செய்து இருக்கிறார்.
Social Plugin