இசையமைப்பாளராக இருந்து தற்பொழுது நாயகனாகவும் நடித்து வருகிறார் G.V. பிரகாஷ். சொல்லிக்கொள்ளும் படியாக வெற்றி எதையும் அவரது படங்கள் கொடுத்துவிடவில்லை என்றாலும், அவருக்கான மார்க்கெட் திரைத்துறையில் அப்படியேதான் உள்ளது.
அவ்வப்போது 'திரிஷா இல்லனா நயன்தாரா' போன்ற சர்ச்சையான திரைப்படங்களிலும் நடித்து வரும் நிலையில், 'அப்படியொரு சர்ச்சை படம்தான் போல இதுவும்' என பார்ப்பவர்களை யோசிக்க வைத்திருக்கிறது அவரது அடுத்த பட பர்ஸ்ட் லுக்.
அறிமுக இயக்குனர் சதிஸ் செல்வகுமார் இயக்கத்தில், பேச்சுலர் இளைஞராக நடிக்கும் இத்திரைப்படத்திற்கு பேச்சுலர் என்றே பெயரும் வைக்கப்பட்டு உள்ளது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி இருந்த நிலையில்,
பெண்ணின் கால்களுக்கு இடையே தலையை வைத்து G.V. பிரகாஷ் படுத்திருக்கும் நிலையில், ஒரு சில குடும்ப ரசிகர்களை முகம் சுளிக்க வைத்து ஆரம்பமே சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
Social Plugin