Ad Code

Responsive Advertisement

மருத்துவமனையில் அமானுஷ்யம்...! கேமராவில் பதிவாகிய பீதியை கிளப்பும் காட்சி


பேய், பூதம் என்ற ஒன்று இல்லை என அறிவியல் அடித்து கூறினாலும், அவை சார்ந்த பயம் நம்மில் பெரும்பாலானோருக்கு உண்டு. கூடுதலாக பேய்கள் இருக்கிறதோ என நாம் எண்ணும் அளவுக்கு அவ்வப்போது ஒரு சில சம்பவங்கள் நிகழ்ந்து பீதியை கிளப்புகிறது.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் அமைந்துள்ள மருத்துவமனையில் நிகழ்ந்த அமானுஷ்ய சம்பவ காட்சிகளும் இப்பொழுது பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

குறிப்பிட்ட காட்சியில் மருத்துவனை வளாகத்தில் உள்ள சக்கர நாற்காலி ஒன்று, எந்த வித உந்துதலும் இன்றி தானாக நகர்கிறது. தரை சாய்வாக இருப்பதால் நகர்ந்திருக்கலாம் என கருத நினைத்தாலும், சீரற்ற பாதையிலும், ஏன் சரிவுக்கு எதிராகவும் நாற்காலி நகர்ந்த காட்சிகள் இதெப்படி சாத்தியம் என்ற கேள்வியை எழுப்ப செய்துள்ளது.

தடைகளையும் தவிர்த்து சுமார் 100 மீட்டருக்கும் மேல் நாற்காலி நகர்வதையும், அதனை நேரில் கண்டு ஊழியர் ஒருவர் திகைத்து போய் நிற்கும் காட்சிகளும் அந்த காணொளியில் இடம்பெற்று இருக்கிறது.