ஒரே நாடு ஒரே மொழி என்கிற தங்களது கொள்கையில் உறுதியாக இருக்கிறது, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி. இதன் காரணமாக ஹிந்தி பேசாத மாநிலங்களில் அந்த மொழியை பேச மக்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்கிற ஒரு குற்றச்சாட்டும் அவ்வப்போது எழுந்து வருகிறது.
என்றாலும், 'நீங்க தலைகீழாக நின்னு தண்ணி குடிச்சாலும் நாங்க ஹிந்தி பேசப்போவதில்லை' என்பதில் உறுதியாக இருக்கின்றனர் தமிழக மக்கள். இந்நிலையில் முன்னாள் பாஜக கட்சியின் உறுப்பினரும், நடிகையுமான காயத்ரி இது குறித்து வாய்விட்டு வாங்கி கட்டி கொண்டிருக்கிறார்.
இது குறித்து நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெறுப்பை சம்பாதித்தவரான காயத்ரி வெளியிட்ட பதிவில், 'ஹிந்தி எந்தஒரு மாநிலத்தையும் சார்ந்தது அல்ல. ஆனால் பெரும்பாலான மாநிலங்களில் பெரும்பாலான மக்களால் பேசப்படும் மொழி. நம்மை ஒருங்கிணைக்கும் மொழி.
அடுத்த தலைமுறையையாவது அனைத்து மாநில மக்களுடன் தடையின்றி உரையாட ஹிந்தி பயில வைப்போம். நம் நாட்டிற்கு தேசிய கொடி, தேசிய பறவை என்று இருக்கும் பொழுது ஏன் தேசிய மொழி இருக்க கூடாது' என தெரிவித்து இருந்தார்.
இதற்கு, பெரும்பாலான நெட்டிசன்கள் கொடுத்த கடுப்பான பதிலடிகளில் ஒரு சில,
தண்ணியால், நட்பால் இந்தியாவை இணையுங்க:
Please try uniting India with water, transport and friendship and not with anything else...— kathiravan (@watchMSKV) September 15, 2019
அப்புறம் ஏன் இந்த பதிவை ஆங்கிலத்தில் பதிவிட்டு இருக்கீங்க..?
Ok Then Put this tweet In Hindi language Why did u use in English ?? 😂😂😂😂— Priyamudan Gopal ( Mdu.) (@Gopalwilachieve) September 16, 2019
Learning Hindi is not a problem
தமிழ்நாட்டில் தலைமையானது தமிழ் மட்டும் தான் 😍😍😍😎😎😎
காக்கா அதிகமா இருக்குங்குறதுக்காக அத தேசிய பறவை ஆக்க முடியுமா?
@gayathriraguram oh oh..— PRAMODH KUMAR RAJAN (@Pramodh_01) September 16, 2019
Appreciate u... Then make crow as national bird & Dog as National animal since population is higher than peacock & Bengal tiger
Social Plugin