நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்குள் நுழைந்து விட்டாலும், அதிகாரபூர்வமாக அரசியல் கட்சி ஏதும் துவங்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் அவர் திடீரென அவசர அவசரமாக கட்சி துவங்கும் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வரும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்பொழுது தர்பார் திரைப்படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த அதன் பின்னரும் திரைப்படங்களில் ஒப்பந்தமாகி இருந்த நிலையில், இப்போதைக்கு அவர் கட்சி துவங்கமாட்டார் என்றே திரைத்துறை மற்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக இருந்து வந்த தமிழிசை, தெலுங்கானாவில் ஆளுநராக நியமிக்கப்பட்ட நிலையில், காலியாக இருக்கும் அந்த இடத்தை ரஜினியை வைத்து நிரப்ப முழு வீச்சில் செய்யப்பட்டு வருகிறதாம் பாஜக.
இதனை உறுதி படுத்தும் விதத்தில், விமர்சனங்களுக்கு பெயர் பெற்றவரான H.ராஜா அவர்களும் திடீரென நடிகர் ரஜினிக்கு ஆதரவு அளித்து பேசி இருந்தார்.
இதனால் தன் மீது முழு 'பாஜக' ஆதரவாளன் என்கிற சாயம் பூசி விடுவார்களோ என அஞ்சிய சூப்பர்ஸ்டார், அடுத்த படத்தில் நடிக்க துவங்குவதற்கு முன் 2020ன் ஆரம்பத்தில் சொந்த கட்சியை ஆரம்பித்துவிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறாராம்.
Social Plugin