Ad Code

Responsive Advertisement

செண்பகமே.. செண்பகமே.. அமெரிக்காவில் கன்று குட்டியுடன் கொஞ்சி விளையாடிய தமிழக முதல்வர்


அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி, கால்நடை பண்ணையில் கன்று குட்டியுடன் கொஞ்சி விளையாடிய காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இதுவரை வெள்ளை வேட்டி சட்டையில் மட்டுமே காண முடிந்த நம் தமிழக முதல்வர்ம், கோர்ட் சூட் என அமெரிக்காவையே கலக்கி வருகிறார். முதல்வரின் இந்த புது அவதாரம் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களிடையே கிண்டலுக்கும் ஆளானது.

இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள பஃப்பல்லோ கால்நடை பண்ணையை இன்று பார்வையிட்ட எடப்பாடி அவர்கள், அங்கு பயன்படுத்தப்படும் தொழிநுட்பங்கள், மருத்துவ சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் அங்கிருந்த கன்று குட்டியுடன் அவர் கொஞ்சி விளையாடிய நிகழ்வும் புகைப்படமாக சமூக வலைத்தளங்களை வலம்வர துவங்கி இருக்கிறது.