மக்கள் உயிருக்கு ஆபத்து என இ-சிகரெட்டுகளுக்கு அரசு தடைவித்தித்து, சிகெரெட் கம்பெனி காரர்களின் நலனுக்காகவே அன்றி மக்கள் நலனுக்காக அல்ல என ஆவேசமாக பேசி இருக்கிறார் நடிகர் சித்தார்த்.
இ-சிகரெட் எனும் புகையிலைக்கு மாறான புதுவித சிகரெட்டை, அண்மையில் 'உடல் நலனுக்கு தீங்கு' என தடை செய்தது இந்திய அரசு. இதற்கு ஒருபுறம் பாராட்டுக்கள் குவிந்து வந்தாலும் இதன் பின்னணியில் இருக்கும் அசிங்கமான அரசியல் குறித்தும் பலர் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சித்தார்த்தும் இது பற்றிய தனது கருத்தை, சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். அவரது பதிவின் படி, 'உயிருக்கு தீங்கான கார்பன் மோனாக்சைடு வாயுவை வெளியிடாத இ-சிகரெட், சாதாரண சிகரெட்டை காட்டிலும் உடலுக்கு தீங்கு' என தடைவிதித்துள்ள நம் அரசின் செயல் முட்டாள் தனமானது.
சிகெரெட்டுகளை தயாரிக்கும் 'ஐடிசி' நிறுவனத்தின் 28% உரிமையை அரசு கொண்டிருப்பதால், மக்கள் இ-சிகரெட் நோக்கி செல்வது சாதாரண சிகெரெட் விற்பனையை மந்தப்படுத்தும் என்பதே அதன் தடைக்கு காரணம்' என ஆவேசமாக பதிவிட்டு இருக்கிறார்.
சித்தார்த் கூறியது போலவே இப்படியொரு காரணம், இ-சிகெரெட் தடைக்கு பின்னால் மறைந்திருப்பதாகவே தெரிகிறது. ஏனென்றால், மக்கள் நலனை கருத்தில் கொள்பவர்களாயின் சிகெரெட் விற்பனையையும் சேர்த்தே அவர்கள் நிறுத்தி இருக்க வேண்டும்.
சாதாரண சிகெரெட் பிடித்தால் மட்டும், உடலுக்கு ஆரோக்யம் கிடைக்கிறதா என்ன?
For the first time in India, a genius govt chooses not to ban the problem, they ban the safer substitute. They'll never ban cigarettes. They own 28% of #ITC. Understand that they banned the reason people are quitting smoking; so they can profit more from death (cigarettes) #SHAME https://t.co/IKref36BPs— Siddharth (@Actor_Siddharth) September 25, 2019
Social Plugin