தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா ஆகியோர் கஷ்டப்படுபவர்களுக்கு தேடி சென்று உதவி பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர். இதன் காரணமாக திரையுலகும் இவர்களது புகழ் பாடி வருகிறது.
இந்நிலையில், நடிகர் விஜய் 700 ஜிம் பாய்ஸின் வாழ்வில் ஒளியேற்றியது குறித்த தகவலை கூறி இருக்கிறார் நடிகர், தீனா. இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய அவர்,
'ஜிம் பாய்ஸ், சுமார் 700 பேர் கடந்த 20 வருடங்களாக சங்கம் அமைத்து செயல்பட்டு வருகிறோம். என்றாலும் தமிழ் சினிமாவின் FEFSI அமைப்பில் இணையமுடியாமல், போதிய உதவிகள் கிடைக்காமல் கேட்பாரற்று கிடந்தோம்.
அண்ணன் விஜய் தான், அந்த தலைவர் செல்வமணி அவர்களுடன் பேசி, எங்களுக்கு உதவும் பொறுப்பை ஏற்று FEFSI அமைப்பில் சேர வழிசெய்தார். அவர் செய்த இந்த உதவி பலரது வாழ்வில் திருப்புமுனையாகி இருக்கிறது'
என நெகிழ்ந்து பேசி இருந்தார்.
Social Plugin