Tuesday, 10 September 2019

திருடனுக்கு கரண்ட் ஷாக் அடித்தது போல...! மின்சாரம் பாய்ந்து 4 திருடர்கள் பலி


கரண்டு கட்டான சமயத்தில் மின்கம்பியை கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையர்கள், எதிர்பாராத விதமாக கரண்ட் வந்ததால் ஷாக் அடித்து இறந்த சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் திகாம்கார் மாவட்டத்தில் பனார்சி என்ற கிராமம் உள்ளது. நேற்று அதிகாலை மின்தடை ஏற்பட்ட நிலையில், அப்பகுதியை சேர்ந்த நான்கு பேர் மின் கம்பத்தில் ஏறி மின்சார கம்பிகளை திருட முயன்றனர்.

துரதிஷ்டவசமாக கட்டான கரண்ட் திரும்பி வந்துவிட, கம்பத்தில் இருந்தவர்கள் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனர். அதில் 4 பெரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதனை அடுத்து அப்பகுதி மக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்த போலீசார் கொள்ளையர்களின் உடல்களை அப்புறப்படுத்தினர்.


Disqus Comments
'