'வசூல் ராஜா எம்பிபிஎஸ்' திரைப்படத்தில் கட்டிப்பிடித்தே பலரது கோபத்தை தனிப்பார் நடிகர் கமலஹாசன். அவரை தொடர்ந்து அவரது சிஷ்யன் கவிஞர் ஸ்நேகனும் இந்த சேவையை பிக்பாஸ் வீட்டு பெண்களுக்கு வாரி வழங்கினார்.
இப்படி இருக்க அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த தம்பதி இதனை ஒரு பணம் ஈட்டும் தொழிலாகவே செய்து வருகின்றனர். அன்றாட வாழ்வில் ஏற்படும் மன அழுத்தத்தால் அமெரிக்காவில் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இதனை பயன்படுத்திக் கொண்ட நியூயார்க் நகரை சேர்ந்த, சுஜானே என்ற பெண்ணும் அவரது கணவரும், தாங்கள் வளர்க்கும் பசுக்களை மக்கள் கட்டியணைத்து கொஞ்சி குலாவ செய்து பலரது மன அழுத்தத்தை குறைக்க உதவி வருகின்றனர்.
இந்த கட்டிப்பிடி வைத்தியத்தை கௌ தெரப்பி எனவும் அழைக்கும் இவர்கள், ஒரு மணி நேரத்திற்கு 5000 ரூபாயை கட்டணமாக விதித்து தங்களது பொருளாரதார தேவையையும் தீர்த்து கொண்டிருக்கின்றனர்.
Social Plugin