பஞ்சாப் மாநிலத்தில் காதல் ஜோடி, பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பஞ்சாபின் குர்ஜான் எனும் பகுதியை சேர்ந்தவர்கள், அர்விந்த் சிங்க்(25), ஹர்பன்ஸ் கௌர்(21) இருவரும் சில வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இவர்களது காதல் ஹர்பன்ஸ் கௌர் குடும்பத்தினருக்கு தெரியவந்த நிலையில், அவரை கடுமையாக கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்து போன காதல் ஜோடி, அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் தங்களது இந்த முடிவை பேஸ்புக்கில் நேரடியாகவும் இவர்கள் ஒளிபரப்ப, இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்தனர். போலீசாரும் அப்பகுதிக்கு விரைந்து சென்று காதலர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Social Plugin