காவல்துறை அதிகாரிகள் என்றாலே முரட்டுத்தனமானவர்கள், லஞ்சம் வாங்குபவர்கள் என மக்கள் மனதில் பதிந்து விட்ட நிலையில், காவல்துறைக்கு இப்படியொரு மறுபக்கமும் உள்ளது என நிரூபித்திருக்கிறது அண்மை சம்பவம் ஒன்று.
ஹைதராபாத் நகரில் கனமழை பெய்து வரும் நிலையில், சாலைகளில் அதிக அளவில் நீர் தேங்கி இருக்கிறது. இந்நிலையில் வெள்ள நீரை கடக்க முடியாமல் தவித்த ஊனமுற்ற நபர் ஒருவருக்கு காவல்துறை நண்பர் செய்த உதவி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
LB நகரை சார்ந்த டிராபிக் போலீஸான நாகமல்லு என்பவர், கால் ஊனமான நபரை தோளில் சுமந்து வெள்ளநீரை கடக்க உதவிய நிலையில், அவரது இந்த மனித நேயமிக்க செயல் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
Lb nagar Traffic CI nagamallu assisting a person with disability at sagar ring road.@KTRTRS @RaoKavitha @HYDTP @hydcitypolice pic.twitter.com/4fEAwjAI2f— Varun Thakkallapalli (@varuntrs58) August 30, 2019
Social Plugin