Ad Code

Responsive Advertisement

கீழடியில் 3000 வருட இயேசு சிலை..!. தமிழர்கள் கிறித்தவர்கள்...! அநியாயத்துக்கு அடிச்சுவிடும் கும்பல்


உலகிலேயே சிந்து சமவெளி நாகரீகத்தைவிட பழமையான நாகரீகங்களில் ஒன்றாக தமிழ் நாகரீகம் சமீபத்தில் அடையாளம் காணப்பட்டது. சுமார் 2600 வருடங்களுக்கு முன்பும் தமிழர்கள் எழுத்தறிவு, கலாச்சாரம் போன்றவற்றில்  விளங்கினான் என்பதை விளக்கும் ஆதாரங்கள் கிடைத்ததை அடுத்து, ஒட்டுமொத்த தமிழ் இனமும் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்து வருகிறது.

அதே சமயம் சமூக வலைத்தளங்களில் புரளிகளை சுற்றலில் விடும் கும்பல், 'கீழடியில் 3000 வருட பழமையான இயேசு சிலை கண்டு பிடிக்கப்பட்டு இருப்பதாகவும், அதனால் தமிழர்கள் பூர்விகமாகவே கிறிஸ்தவர்கள்' என அடித்துவிட்டு வருகிறது.

ஆனால் இயேசு பிறந்து வாழ்ந்த காலகட்டத்தின் வலுவான ஆதாரங்கள் ஏற்கனவே இருக்கும் நிலையில், இப்படி புரளி கிளப்பி வரும் கும்பலை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.