Ad Code

Responsive Advertisement

அரைகுறை ஆடையில் வந்த '8 வயது' மாணவி..! கண்டித்த ஆசிரியைக்கு சின்மயி கண்டனம்


பள்ளி சிறுமி ஒருவரின் உடையை கண்டித்த ஆசிரியரை விமர்சித்து, பாடகி சின்மயி வெளியிட்டுள்ள சமூக வலைதளபதிவு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மீடூ பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு பிரபலமானவரான சின்மயி, தன்னைப்போல பாதிக்கப்பட்ட பெண்களின் கதைகளையும் தனது சமூக வலைதள பங்கங்களில் வெளியிட்டு நீதி கேட்டு வருகிறார்.

இந்நிலையில் தாய் ஒருவர், 'என் 8 வயது பெண் படிக்கும் பள்ளியில், குட்டைபாவாடை, லெக்கின்ஸ், ஜீன்ஸ் அணிய தடை உள்ளது. ஒருமுறை அவளுக்கு நீளமான பாவாடை அணிவித்தே பள்ளிக்கு அனுப்பினேன்.

ஆனால் எனக்கு போன் செய்த என் மகளின் ஆசிரியை, எப்படி இது போன்ற அரைகுறை ஆடைகளை அணிவித்து மகளை பள்ளிக்கு அனுப்புகிறீர்கள்? என கொச்சையாக பேசியதாக சின்மயிடம் முறையிட்டு இருந்தார்.

இதனை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்த சின்மயி, எப்படி ஒரு ஆசிரியை 8வயது குழந்தையின் ஆடையை விமர்சிக்கலாம்? என கேள்வியும் எழுப்பி இருக்கிறார்.