பணத்துக்காக பெற்ற மகளையே பலரது காம பசிக்கு விருந்தாக்கிய கொடூர தந்தை கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
கேரள மாநிலம், மலப்புரம் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி, படிப்பில் கவனமின்றி சோகமாகவே காணப்பட்டு இருக்கிறார். இந்நிலையில் குறிப்பிட்ட மாணவி குறித்து பெற்றோர்களிடம் விசாரித்த ஆசிரியர்களுக்கு மழுப்பலான பதிலே கிடைத்திருக்கிறது.
என்றாலும் தொடர்ந்து விசாரித்ததில், பலரின் பாலியல் தேவைக்காக மாணவி பெற்றோரின் அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டு இருப்பதை, அப்பகுதி மக்கள் வாயிலாக கண்டறிந்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், குழந்தைகள் நல அமைப்பினை தொடர்பு கொண்டு இது குறித்து புகார் அளித்தனர். சிறுமியிடம் பேசி நடந்ததை உறுதி செய்த அவர்கள், சிறுமியின் தந்தை மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
காவல்துறையின் கிடுக்கிப்பிடி விசாரணையில், பணத்துக்காக மகளையே பலருக்கு விருந்தாக்கியதை ஒப்புக்கொண்டார். மேலும் 30-க்கும் மேலானவர்கள் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக, சிறுமியின் தந்தை மற்றும் அப்பகுதியை சேர்ந்த, அஷ்ரப், ஷைஜு ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 30 பேர், யார் யார் என தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இப்படியொரு கொடூர சம்பவம் மலப்புரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Social Plugin