Ad Code

Responsive Advertisement

விபச்சாரிகளுடன் உல்லாசம்..! '4000' ஆபாச வீடியோக்கள்...! அடுத்தடுத்து சிக்கும் அரசியல்வாதிகள்


உல்லாச வீடியோக்களை காட்டி அரசியல்வாதிகளிடம் பணம் பறிக்கும் கும்பல் மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறது.

மத்திய பிரதேசம், போபாலில் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் என ஆபாச வீடியோக்களை காட்டி ஒரு கும்பல் பணம்பறிப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து களத்தில் இறங்கிய ஏடிஜிபி 'சஞ்சீவ் சமி', சிறப்பு புலனாய்வு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இதனை அடுத்து விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்கள் அடங்கிய குழு போலீசாரால் கைது செய்யப்பட்டது.

இவர்கள் சமூகத்தில் பெரிய இடத்தில் இருக்கும் நபர்களை குறிவைத்து, உறவு ஆசை காட்டி மயக்கி, தங்கள் அறைக்கு அழைத்து செல்வதும். பின்பு அவர்களுடன் உறவு கொண்டு அதனை ரகசிய கேமராக்கள் மூலம் பதிவு செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் பதிவு செய்த வீடியோக்களை காட்டி மிரட்டி சிக்குபவர்களிடம் பணம் பறித்ததையும் போலீசார் கண்டறிந்தனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப் மற்றும் மொபைல் போன்களில் இதுபோன்ற 4000க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் கண்டறியப்பது.     

குறிப்பிட்ட வீடியோக்களில், பாஜக, காங்கிரஸ் அரசியல் தலைவர்கள், பிரபல தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள் என பல முக்கிய புள்ளிகள் அடையாளம் காணப்பட்டு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.