Monday, 9 September 2019

சொகுசு வாழ்க்கை..! லட்சங்களில் கொட்டும் பணம்...! விபச்சாரத்தில் சிக்கும் கல்லூரி மாணவிகள்


நெல்லையில் கல்லூரி மாணவிகளை பணத்தாசை காட்டி விபச்சாரத்தில் சிக்க வைக்கும் கும்பல் கேட்போரை கதிகலங்க வைத்திருக்கிறது.

கன்னியாயாகுமரி வள்ளியூரை சேர்ந்த பீட்டர் மார்ட்டின் என்பவர் அப்பகுதியில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ப்ராஜெக்ட் வேலைகள் செய்து கொடுக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இங்கே ப்ராஜக்ட் உதவி கேட்டு வரும் மாணவிகளை 'சொகுசு வாழ்க்கை, லட்சங்களில் பணம்' என ஆசை வார்த்தைகள் கூறி அப்பகுதியை சேர்ந்த பணக்கார தொழிலதிபர்களுக்கு விருந்தாக்கி, விபச்சார தொழிலில் ஈடுபடுத்தி வந்திருக்கிறார்.

பெரும்பாலும் ஏழ்மையான குடும்ப சூழலில் உள்ள பெண்களையே குறிவைக்கும் இவன், அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி மாணவிகளை விபச்சாரத்திற்குள் சிக்க வைத்து இருக்கின்றான்.

நட்சத்திர ஹோட்டலில் கல்லூரி பெண் ஒருவரை, இரண்டு வாலிபர்களுக்கு இவன் விருந்தாக்க இருந்த நிலையில், சந்தேகம் கொண்ட ஹோட்டல் ஊழியர்கள் காவல்துறையை தொடர்புகொள்ள வெளிவந்திருக்கிறது இந்த ஹைடெக் விபச்சார விபரீதங்கள்.

இந்நிலையில், பீட்டர் மார்டினை கைது செய்து விசாரித்து வரும் போலீசார் இதுவரை நூற்றுக்கணக்கான குடும்ப பெண்கள், கல்லூரி மாணவிகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை கைப்பற்றியுள்ளனர்.

 


Disqus Comments
'