தாய் என்ற உறவை காட்டிலும் புனிதமான உறவு இந்த உலகத்திலேயே இல்லை என்பதை யாராலும் மறுக்க முடியாது. இப்படியொரு புனித உறவையும் கொச்சை படுத்தி, முகம் சுளிக்க வைக்கும் பெண்களும் உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இப்படியொரு கேவலமான சம்பவம், தஞ்சை திருவையாற்றில் நிகழ்ந்தேறியுள்ளது. திருவையாரை ஒட்டியுள்ள கிராமத்தில் 40 வயதான கமலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு, அப்பகுதியில் வசித்து வந்த 28 வயதான வாலிபருடன் கள்ள காதல் ஏற்பட்டு இருக்கிறது.
ஒரு வருடமாக இவர்கள் உல்லாச வாழ்க்கையை நடத்தி வர, எந்த வித
தடங்களும் இன்றி கள்ளகாதலுடன் மேலும் பழக, 'என் மகளையே உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன்' என கள்ளகாதலனுக்கு யோசனை கூறி இருக்கிறார்.
ஆரம்பத்தில் கள்ளக்காதலன் இதற்கு ஒப்புக்கொண்டாலும், திருமண ஏற்பாடுகளை கமலா துவங்குவதற்கு முன்னதாகவே, அவரது வீட்டில் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கமலா, 'தன் மகளை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக', காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன் காரணமாக போலீசாரும் இளைஞரை அழைத்து விசாரித்த போது தான் தெரிந்திருக்கிறது, தாயாரின் கள்ளக்காதல் லீலைகள். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், 'இந்த வயதில் கள்ளகாதலா?' என தாயாரை கண்டித்ததுடன், இளைஞர் மேல் அவர் கொடுத்த வழக்கையும் வாபஸ் பெற வைத்தனர்.
Social Plugin