கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி ஆகிய சீரியல்களில் நடித்து தனது வசீகர தோற்றத்தினால் இளசுகளை கவர்ந்தவர் இர்பான்.
ஒரு சில திரைப்படங்கலில் நாயகனாகவும் தோன்றி இருந்த இவர் சினிமா வாய்ப்புக்கள் இன்றி ஹோட்டலில் சர்வராக பணி புரிந்த சம்பவம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சமீபத்தில் வெப்சீரிஸ் ஒன்றினை இயக்க இருப்பதாக நிதி கேட்டு இவர் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கும் பேட்டி அளித்து இருந்தார்.
அதில், சின்னத்திரை வாய்ப்புகளை தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வந்தது. ஓரிரு படங்களில் நடித்தாலும் பெரிய அளவில் ஜொலிக்க முடியவில்லை. இதனால் திரைத்துறையில் என்னை மறந்துவிட்டனர்.
கையில் இருந்த காசும் கரைந்த நிலையில், நண்பன் வைத்திருந்த உணவகத்தில் சர்வராக பணிபுரிந்தேன்.
யாரும் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக முகத்தை மறைத்து மாஸ்க் அணிந்துதான் வேலை செய்வேன். ஒருமுறை ஹோட்டலுக்கு வந்த வாடிக்கையாளர் என்னை அடையாளம் கண்டு பரிதாபமாக விசாரிக்க ஆரம்பித்து விட்டார்.
அன்று நான் கண்ணீர் விட்டு அழுததை போல என் வாழ்நாளில் அழுததில்லை. அதன் பின் நண்பன் தான் உனக்கு சர்வர் வேலை வேண்டாம் என சினிமாவில் முயற்சிக்க சொல்லி ஊக்குவித்தான்.
என்னதான் முன்பு நாயகனாக நடித்திருந்தாலும், இயக்குனர் ஆக வேண்டும் என்பதே என் கனவு. அதை நோக்கியே இப்பொழுது கிடைத்த டிவி சீரியல் வாய்ப்புகளையும் மறுத்து இயக்குனர் ஆக முழு மூச்சில் செயல்பட்டு வருகின்றேன் என பேசி இருந்தார்.
Social Plugin