சென்னையை சேர்ந்த மென்பொறியாளர் சுபஸ்ரீ பேனர் விழுந்து லாரிக்கடியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஆட்டி படைத்தது.
இது குறித்து தமிழ் நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் பேசப்பட்டு வரும் நிலையில், 'இதன் பின்னரும் இது போன்ற ஒரு சம்பவம் நடக்க கூடாது' என்பதற்காக விஜய் ரசிகர்கள் எடுத்த முடிவு பலரிடமும் பாராட்டை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜயின் பட ரிலீஸின் போது, போஸ்டர் பேனர்கள் என ஒரே திருவிழா கோலம் பூண்டு இருக்கும். இந்நிலையில் பொதுமக்களுக்கு இனியும் இடையூறாக இருக்க கூடாது என்பதை சுபஸ்ரீ சம்பவத்தின் மூலம் உணர்ந்த ஒரு சில ரசிகர்கள்,
இனி விஜயின் படங்களை தியேட்டர் உள்ளே மட்டுமே கொண்டாடுவோம், போஸ்டர் பேனர் வைக்கமாட்டோம் என என சமூக வலைத்தளங்களில் சபதமெடுத்து வருகின்றனர்.
Expecting #ThalapathyVijay fans to celebrate #Bigil only inside theaters and set a new trend by not wasting money on large cutouts, banners and Milk abishekam which cost innocent lives. Expecting #Thalaivar #Thala #Suriya @dhanushkraja and other fan groups to follow the same.— Rajasekar (@sekartweets) September 14, 2019
Social Plugin