Ad Code

Responsive Advertisement

அடிமேல் அடிகொடுக்கும் அதிமுக.. அலறிப்போய் நிற்கும் தளபதி...


பிகில் திரைப்பட இசைவெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், ஆளும் கட்சியை சீண்டும் விதமாக பேசி இருந்தார். இந்த விவகாரம் அரசியல் கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் நடிகர் விஜயின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக நேற்று, 'தங்களது தொழில் தெய்வமான கரிக்கட்டை மீது காலை வைத்திருப்பதாக', விஜய் பட போஸ்டரை கிழித்து கரி கடை வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.


இது ஒரு புறம் இருக்க இசைவெளியீட்டு விழா நடைபெற்ற சாய்ராம் கல்லூரி 'எவ்வாறு இப்படியொரு நிகழ்ச்சியை நடத்த அனுமதி வழங்கலாம்?' என கல்வி துறை வாயிலாக கேள்வி எழுப்பட்டுள்ளது.

முன்னதாக அலைகடலென திரண்ட விஜய் ரசிகர்கள் கூட்டத்தை கண்டு அலறிய கல்லூரி நிர்வாகம் இனி எந்த வித சினிமா நிகழ்ச்சிகளையும் நடத்தக்கூடாது என்ற ஒரு முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் இப்படி ஒரு பிரச்சனை எழுந்துள்ளதால், நடிகர் விஜய் திரைப்பட நிகழ்ச்சிகள் வழக்கம் போல அங்கு நடைபெற முடியாத நிலையை ஏற்படுத்தி இருக்கிறது ஆளும் கட்சி.


ஏற்கனவே அரசு கட்டுப்பாட்டில் உள்ள நேரு அரங்கம், விஜய் பட விழாக்களுக்கு மறுக்கப்பட்டு வரும் நிலையில், சாய்ராம் கல்லூரியும் கைவிரித்து விட்டதால் இனி விஜய் திரைப்பட பிரமாண்ட கூட்டங்கள் எங்கு நடைபெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இது ஒரு புறம் இருக்க, இப்பொழுதே இவ்வளவு குடைச்சல் கொடுக்கும் கட்சி, பட ரிலீஸின் போது என்ன என்ன செய்ய இருக்கிறார்களோ என்கிற கலக்கமும் தளபதி விஜயை தொற்றிக்கொண்டு உள்ளதாக கூறப்படுகிறது.