Ad Code

Responsive Advertisement

ஆத்தாடி ஒரு டிக்கெட் விலை இவ்வளவா..? பிகில் இசைவெளியீட்டு விழாவில் நடந்த கொள்ளை


அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் பிகில் திரைப்பட இசைவெளியீட்டு விழா அண்மையில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது.

எப்பொழுதும் இல்லாத அளவுக்கு விஜய் உற்சாகமாக பேசியது, பாடல் பாடியது என விழா ஒரு புறம் பட்டையை கிளப்பி கொண்டிருக்க மறுபுறம், உள்ளே செல்ல முடியாமல் விஜய் ரசிகர்கள் பலர் போலீசாரிடம் அடிவாங்கி கொண்டிருந்தனர்.

இதனால் பெரும் சலசலப்பு நிலவ, பிகில் இசைவெளியீட்டு விழா டிக்கெட் விலை குறித்த தகவலும் தற்பொழுது வெளியாகியுள்ளது. உள்ளே செல்ல முடியாமல் தவித்த ரசிகர்கள் மீடியாக்களுக்கு அளித்த பேட்டியில்,

'2000 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கியும் உள்ளே செல்ல முடியவில்லை, என புலம்பி தவித்தனர். இதனை கேட்டு அதிர்ந்த பலரும், முதல் நாள் காட்சியில்தான் தியேட்டர் டிக்கெட்டில் கொள்ளை அடிக்கிறார்கள் என்று பார்த்தால் இசைவெளியீட்டு விழாவிலும் கொள்ளையா? என விமர்சித்து வருகின்றனர்.