Ad Code

Responsive Advertisement

அடேங்கப்பா...! பிக்பாஸ் கவினுக்கு கிடைத்தது மொத்தம் இத்தனை லட்சமா..? வெளியான சம்பள விவரம்


பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலமான போட்டியாளராக வலம்வந்த கவின், எவரும் எதிர்பாராத படி திடீரென வெளியேறினார். பிக்பாஸ் கொடுத்த 5 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு அவர் வெளியேறி இருந்த நிலையில், இந்நிகழ்ச்சியில் அவர் மொத்தம் சம்பாரித்த தொகை எவ்வளவு என்பது குறித்த ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வலம்வருகிறது.

முன்னதாக பிரபல செய்தி ஊடகம் ஒன்றில், கவின், சரவணன், சாண்டி ஆகியோரது சம்பள விவரங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் படி நாளொன்றுக்கு 35000 ரூபாய் சம்பளமாக பெற்றார் கவின்.

அதன் அடிப்படியில் பார்த்தால், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் போது 95 நாட்களை கடந்திருந்த நிலையில், மொத்தம் 33,25,000 ரூபாயை சம்பாரித்து இருந்தார் கவின்.

இறுதியாக பிக்பாஸ் 5,00,000 ரூபாய் வழங்கிய நிலையில் மொத்தம் 38,25,000 ரூபாயை அந்நிகழ்ச்சியின் மூலம் சம்பாரித்து இருப்பதாக இணையத்தில் வலம்வரும் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.