ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தனது ஆவேச முழக்கங்களினால் வீரத்தமிழச்சி என பெயர் எடுத்த மரிய ஜுலியான அதே வாயால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போலி ஜுலி என பெயர் எடுத்து கேலி கிண்டல்களுக்கு ஆளானார்.
அந்த நிகழ்ச்சிக்கு பிறகு சில மாதங்கள் பரபரப்பாக பேசப்பட்ட அவருக்கு, ஓரிரு படவாய்ப்புகள் வந்தது. வந்த வேகத்தில் நடித்து கொடுத்தாலும் எந்த படமும் ரிலீஸ் ஆவது போல இல்லை.
இதனால் தற்பொழுது வேறு படவாய்ப்புகளும் இன்றி கேட்பாராற்று கிடக்கும் அவர், மீண்டும் படவாய்ப்புகளை பெற, 'நல்ல கதைக்களத்துடன் எவரேனும் குறும்படங்கள் எடுத்தால் நான் இலவசமாகவே நடித்து கொடுக்கிறேன்' என வழிய சென்று வாய்ப்புகள் தேடி வருகிறார்.
Social Plugin