Ad Code

Responsive Advertisement

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் நுழையும் சர்ச்சை போட்டியாளர்..?? ரசிகர்களை அதிர வைக்கும் தகவல்


பிக்பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதா, அபிராமி, கஸ்தூரி என அடுத்தடுத்து போட்டியாளர்கள் வெளியேற நிகழ்ச்சியின் விறுவிறுப்பு வெகுவாக குறைந்துவிட்டது.

இந்நிலையில் விழுந்த சுவாரஸ்யத்தை மீண்டும் எழ வைக்க சர்ச்சையான முறையில் வெளியேறிய போட்டியாளரை மறுபடியும் விஜய் டிவி களம் இறக்க இருப்பதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.

ஆம், தற்கொலை செய்துகொள்ள முயன்றதாக வெளியேற்றப்பட்ட மதுமிதா தான் அந்த போட்டியாளர் என கூறப்படுகிறது. சிறிய டாஸ்கின் போது எழுந்த பிரச்சனையில் தனது கையை அறுத்துக்கொண்டு விபரீத முடிவெடுத்தார் மதுமிதா.


இதனால் அவர் உடனடியாக நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டதுடன், சம்பளம் தொடர்பாக மிரட்டல் விடுப்பதாக அவர் மீது வழக்கும் தொடர்ந்தது விஜய் டிவி. இது தொடர்பாக விஜய் டிவியுடன் நிகழ்ந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிய, சம்பள பிரச்சனை முடிவுக்கு வந்ததுடன் அவரை வைல்ட் கார்ட் போட்டியாளராக களம் இறக்கவும் விஜய் டிவி முடிவு செய்திருருப்பதாகவும் ஒரு தகவல் வலம்வருகிறது.