நடிகர் அஜித்தின் மகளாக, 'என்னை அறிந்தால்', விஸ்வாசம் ஆகிய திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானவர் பேபி அனிகா.
என்னதான் திரையுலகில் அவரை பேபி அனிகா என்று அழைத்தாலும், இளம் நாயகிகளுக்கு இணையாக, 'ஒப்பனை, போட்டோஷூட்' என அசத்தி வரும் அவருக்கு இப்பொழுதே ரசிக பட்டாளங்களும் உருவாக துவங்கியுள்ளது.
இந்நிலையில் அவரது சகோதரி என கூறி இளம் பெண் ஒருவரது புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. பார்க்க அச்சு அசலாக அனிகாவை போலவே அந்த பெண் இருக்கிறார்.
இருப்பினும் அனிகாவுக்கு மூத்த சகோதரிகள் யாரும் இல்லை எனும் நிலையில், வெளியானது பொய்யான தகவல் என்கிறது சினிமா வட்டாரங்கள்.
Social Plugin