வயது வித்யாசம், முந்தைய காதல் கிசுகிசுக்கள் என பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு இளம் நடிகை சயீஷாவை காதல் திருமணம் செய்து கொண்டார் நடிகர் ஆர்யா.
மிகவும் சுமூகமாக இவர்களது காதல் திருமண வாழ்க்கை சென்று கொண்டிருக்க சமூக வலைத்தளமான ட்விட்டரில் இவர்கள் அன்பை பரிமாறிக்கொண்டது ரசிகர்களை 'வாவ்..! வாட்ட கப்பிள்?' என பாராட்ட வைத்திருக்கிறது.
ஆர்யா நடிப்பில் மகாமுனி திரைப்படம் நேற்று வெளியானது. இந்நிலையில் தனது அன்பு கணவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதத்தில் அவரது போட்டோவை தனது டி ஷர்ட்டில் பிரிண்ட் செய்து அணிந்திருந்தார் சாயீஷா.
இதனை அவர் புகைப்படமாகவும் எடுத்து வெளியிட்டிருந்த நிலையில், நெகிழ்ந்து போன ஆர்யா, 'எனது மிகப்பெரிய பலம் என் மனைவிதான்' என மறுபதிவிட்டு தனது அன்பையும் வெளிக்காட்டி இருக்கிறார் .
My biggest supporter 😍😍🤗🤗🤗😘😘😘😘#wifeylove https://t.co/v96xoOv6mp— Arya (@arya_offl) September 6, 2019
Social Plugin