Ad Code

Responsive Advertisement

அதை பற்றி என் மனைவியே கண்டுக்கல...! நிம்மதி பெருமூச்சு விடும் ஆர்யா


நடிகர் ஆர்யாவின் திரையுலக வாழ்வில் மிகவும் சர்ச்சைக்கு உள்ளாகிய விஷயங்களில் எங்கள் வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியும் ஒன்று. டிவி நிகழ்ச்சியில் தனக்காக பெண்ணை கண்டறிந்து திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிவித்து கடைசியில் எவரையும் திருமணம் செய்து கொள்ளாமல் டிமிக்கி கொடுத்தார் ஆர்யா.

இந்த விவகாரத்தில் அவரது பெயர் எக்கச்சக்கமாக டேமேஜ் ஆக, எதையும் கண்டுகொள்ளாமல் நடிகை சாயிஷாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.

இன்றும் எங்கள் வீட்டு மாப்பிள்ளை விவகாரம் அவரை துரத்தி கொண்டிருக்க, அது பற்றிய தனது மனைவியின் மனநிலையை முதன் முறையாக வெளியிட்டு இருக்கிறார் ஆர்யா.


சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டஅவர் , 'எங்கள் வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டது என் தனிப்பட்ட முடிவு, அது குறித்த எந்த கேள்வியையும் சாயிஷா எழுப்பியதில்லை. ஏன், அந்நிகழ்ச்சி நாங்கள் ஒருமுறை கூட பேசியதில்லை' என தெரிவித்திருந்தார்.