நடிகை அனுஸ்காவின் நிலை திரைத்துறையினர் 'அய்யயோ பாவம்' என பரிதப்படும் அளவிற்கு உள்ளது.
தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் உச்ச நடிகர்களுடன் நடித்து முன்னணியில் இருந்தவர் நடிகை அனுஸ்கா. 'இன்னும் 10 ஆண்டுகளுக்கு யாராலும் இவரை அசைக்க முடியாது' என்ற வலுவான இடத்தில் இருந்து வந்த அனுஸ்கா யார் கண் பட்டதோ தெரியவில்லை தற்பொழுது கேட்பாரற்று கிடக்கிறார்.
நடிப்பு, அழகு என 30 வயதை தாண்டியும் முன்னணி நடிகரின் முதல் தேர்வாக இருந்துவந்தவர், நடிகர் ஆர்யாவுக்காக உடல் எடையை கூட்டி, 'ஒல்லி பெல்லி' என்ற பிளாப் படத்தில் நடித்தார்.
படம்தான் பிளாப், கூடிய எடையையாவது குறைப்போம் என்றாலும் அவரால் முடியவில்லை. 'உடலை பிட்டாக வைத்துக்கொள்ளும் யோகா பயிற்சியாளருக்கே இந்த நிலைமையா' என பலரும் ஆச்சர்யப்படும் விதத்தில், வெளிநாடு சென்று எடுத்துக்கொண்ட சிகிச்சைகளும் பலனளிக்கவில்லை.
இதனால் இருந்த படவாய்ப்புகளும் பறிபோக, செய்வதறியாது தவித்து வருகிறாராம் அனுஸ்கா.
Social Plugin