Ad Code

Responsive Advertisement

கரணம் தப்பினால் மரணம்..! ஆபத்தான பாறையில் அசால்டாக தொங்கிய அமலாபால்...!


நடிகை அமலாபால் நடிப்பை தாண்டி ட்ரெக்கிங், உலக சுற்றுலா போன்றவற்றில் அதிகம் ஈடுபட்டு வருகிறார். மேலும் தனது பயண புகைப்படங்களை ரசிகர்களுடன் தவறாது பகிரும் அவரது சமீபத்திய புகைப்படம் சற்று பீதியை கிளப்பியது என்றே கூற வேண்டும்.

சமீபத்திய சுற்றுலாவில் நீச்சல் உடையில் ஆற்றில் குளித்த அமலாபால், அருகில் இருந்த மலை குன்றில் எந்தவித பாதுகாப்பு உபகரணமும் இன்றி ஏறி விளையாடினார்.

கரணம் தப்பினால் மரணம் என மிகவும் ஆபத்தாக காணப்பட்டதனது விபரீத விளையாட்டினை புகைப்படமாகவும் வெளியிலிருந்த அவர், 'கொல்லக்கூடிய அனைத்து விஷயங்களும் தம்மை உயிரூட்டமுள்ளவராக உணர செய்கிறது' என்கிற வரிகளையும் அதனுடன் பதிவிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.