கட்டுப்பாடின்றி திரியும் ரசிகர்களை முறையான வழிகாட்டுதல் இருந்தால் நல்ல விஷயங்களுக்கும் பயன்படுத்தலாம் என்பதை நடிகர் விஜய் அண்மையில் நிரூபித்து காட்டி இருந்தார்.
அரசியல் விமர்சனம், ரசிகர்கள் லத்தியடி வாங்கியது போன்ற சர்ச்சைகள் ஒரு புறம் இருந்தாலும், தான் சொன்ன ஒரு வார்த்தைக்காக தற்பொழுது சமூக அக்கறை கொண்ட விஷயங்களை பேசுவதில் ரசிகர்களை ஆர்வம் காட்டும்படி செய்தார் விஜய்.
ரசிகர்களும் விஜயின் வார்த்தைகளை பின்பற்றி, இந்திய மீடியாக்கள் ஏன் தமிழக மீடியாக்கள் பேச தவறிய கீழடி பற்றிய தகவல்களை, இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து பிற மாநில மக்களும் தெரிந்து கொள்ளும் படி செய்தனர்.
இப்படி விஜய் ரசிகர்களை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தி கொண்டிருக்க, அஜித்தோ, 'ரசிகர்கள் கண்ணில் இனி பட்டுவிடக்கூடாது' என தனது வீட்டிலேயே டப்பிங் தியேட்டர் கட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இதனால், 'இப்படியொரு மாபெரும் ரசிகர் படையை வைத்திருந்தும், முறைப்படுத்தாமல் தன் படத்திற்கு வசூல் வந்தால் மட்டும் போதும் என்றிருக்கும் அஜித் ஒரு சுயநலவாதி. விஜய் போல ரசிகர்களை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்த திறமை பத்தாது' என திரையுலகினர், சமூக ஆர்வலர்கள் சகட்டு மேனிக்கு விமர்சித்து வருகின்றனர்.
Social Plugin