பிரபல அரசியல் பேச்சாளரான வே.மதிமாறன் அவர்கள் நடிகர் அஜித்தை விமர்சித்து பேசிய காணொளி அஜித் ரசிகர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது.
தமிழகத்தில் பாஜக கட்சியின் அவல நிலை குறித்து, பேசிய அரசியல் பேச்சாளரான வே.மதிமாறன், அதற்கு உதாரணமாக நடிகர் அஜித்தை எடுத்துக்காட்டி பேசிய வார்த்தைகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
'நடிகர் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் விஸ்வாசம், அதன் கட்டவுட் விபத்தில் ரசிகர்கள் காயம் அடைந்தனர் அப்போதும், ஏன் அவரது ரசிகர் ஒருவர் குடும்பப்படமான விஸ்வாசம் பார்க்க காசுத்தராத அப்பாவையே மண்ணெண்ணய் ஊற்றி தீவைக்கிறார்'
இப்படிப்பட்ட பேச வேண்டிய விஷயங்களை கூட பேசாத அஜித், தமிழிசை அவர்கள் அஜித்தின் ரசிகர்கள் மூன்று பேரை தங்கள் கட்சியில் இணைத்த செய்தி வெளியானதும், ஏதோ அவரது வீட்டில் வெடிகுண்டு வைத்ததை போல அலறியடித்துக்கொண்டு அறிக்கை அனுப்புகிறார்.
இதிலேயே தமிழகத்தில் பாஜக கட்சியின் நிலை என்ன என்பது தெரிந்துவிட்டது' என சர்ச்சைக்குரிய முறையில் பேசி பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.
Social Plugin