Ad Code

Responsive Advertisement

விஜய் சார் தங்கம்...! அஜித் எங்களை கைவிட்டுட்டார்... புலம்பும் சினிமா தொழிலாளர்கள்


'ஒட்டுமொத்த திரையுலகமே எதிர்த்தும், தமிழ் திரைப்பட தொழிலாளர்களுக்கு ஆதரவு குரல் கொடுத்த ஒரே நடிகர் அஜித். இன்று அந்த அஜித்தே எங்களை மறந்து விட்டார்' என புலம்பி வருகின்றனர்  பெஃப்சி தொழிலாளர்கள்.

விஷயம் என்னவென்றால், நடிகர் அஜித் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை  என அடுத்தடுத்து அவரது படங்களை ஆந்திராவில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடத்தவே பரிந்துரை செய்து இருந்தார்.

இதனால், ரஜினி, விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்களை வைத்து மட்டுமே பிழைப்பை ஓட்டிவந்த, தமிழ்  திரைப்பட தொழிலாளர்களின் வேலை வாய்ப்புகள் குறைந்தது.

அஜித் ஒருபுறம் இப்படி என்றால், நடிகர் விஜய், இயக்குனரே வெளிமாநிலங்களிலோ, வெளிநாட்டிலோ படப்பிடிப்பு நடத்த கேட்டாலும், தமிழக ஊழியர்களின் நலன் கருதி பெரும்பாலும் தமிழகத்தில் நடத்தவே வேண்டுகோள் விடுத்து வருகிறார்.    

இதனால் விஜயை புகழ்ந்து வரும் தொழிலாளர்கள், நடிகர் அஜித்தையும் தமிழகத்தில் படப்பிடிப்புகளை நடத்த கோரி வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.