Wednesday, 4 September 2019

'சர்கார்' படப்பிடிப்பில் அஜித் பற்றி விஜய் கேட்ட அந்த ஒரு தகவல்..! உண்மையை சொன்ன யோகிபாபு


என்னதான் அஜித் விஜய் ரசிகர்கள் எலியும் பூனையுமாக ஒருவரை ஒருவர் தாக்கி பேசி கொண்டாலும் சம்பந்தப்பட்ட அஜித், விஜயே தங்களுக்குள் நட்பு பாராட்டி தான் வருகின்றனர்.

இந்நிலையில், இருவருக்குமிடையேயான இந்த நட்பை நிரூபிக்கும் விதத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் குறித்து பேசி இருக்கிறார் நடிகர் யோகிபாபு. தமிழ் சினிமா வட்டாரத்தில் பாப்புலர் காமெடியனாக வலம்வரும் யோகிபாபு, ஒரே நேரத்தில் அஜித்தின் விஸ்வாசம், விஜயின் சர்க்கார் திரைப்படங்களில் நடித்து வந்தார்.


அப்பொழுது யோகிபாபுவுடன் படப்பிடிப்பில் பேசிக்கொண்டிருந்த விஜய், 'எந்த படப்பிடிப்பில் இருந்து வருகிறீர்கள்?' என வினவ, யோகிபாபுவும் 'நடிகர்  அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம்' என பதில் அளித்து இருக்கிறார். 

உடனே நடிகர் விஜய், 'அஜித் எப்படி இருக்கிறார்?' என அன்பாக நலம் விசாரித்து இருக்கிறார். இது ஒருபுறம் என்றால் விஸ்வாசம் படப்பிடிப்பிலும் இதே போன்ற உரையாடல் நிகழ, அஜித்தும் 'விஜய் எப்படி இருக்கிறார்?' என சொல்லிவைத்ததை போல நலம் விசாரித்து இருக்கிறார்.

இந்த தகவலை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருந்த யோகிபாபு, ரசிகர்கள் தான் ஒருவரை ஒருவர் வெறுத்து வருகின்றனர். மாறாக ஒருவருக்கொருவர் அன்பு காட்டுங்கள் என குறிப்பிட்டு இருந்தார்.
Disqus Comments
'