Ad Code

Responsive Advertisement

அஜித்தையே கவர்ந்த குழந்தை நட்சத்திரம்..! அவரே நடிக்க அழைக்கிறார்னா சும்மாவா


'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தை அடுத்து மீண்டும் இணைகிறது, அஜித், வினோத், போனிகபூர் கூட்டணி.

நேர்கொண்ட பார்வை திரைப்பட வெற்றியை தொடர்ந்து மீண்டும் H.வினோத் இயக்கத்தில் நடிக்க தல அஜித் ஒப்புக்கொண்டு இருக்கிறார். இத்திரைப்படத்தையும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனிகபூரே தயாரிக்க இருக்கிறார்.

இத்திரைப்படத்தில் பைக் ரேஸர் கதாபாத்திரத்தில் அதிரடியான வேடத்தில் நடிக்கும் அஜித், விஸ்வாசம் திரைப்படத்தை போல பாசமிகு தந்தையாகவும் நடிக்கிறாராம்.

இதனால் அஜித்தின் மகளாக நடிக்க வைக்க குழந்தை நட்சத்திர தேர்வு நடத்த படக்குழு சார்பில் திட்டமிடப்பட, என்னை அறிந்தால், விஸ்வாசம் திரைப்படங்களில் தனக்கு மகளாக நடித்த, அனிகாவையே நடிக்க வைக்க பரிந்துரைக்கிறாராம் தல அஜித்.