மகள் இல்லாத சமயத்தில், மருமகனுடன் எல்லை மீற முயன்ற மாமியார் வீடியோ ஆதாரத்துடன் சிக்கி இருக்கிறார்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள அனந்தபூர் பகுதில் வசித்து வருபவர் ராகுல். இவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த கல்லூரியில் பயிலும் பெண்ணோடு திருமணம் நடந்து முடிந்தது.
திருமணம் ஆனாலும், தனது மனைவியை தனது கல்லூரி படிப்பை தொடர அனுமதி வழங்கி இருந்தார் ராகுல். இந்த தம்பதி வசித்து வந்த வீடு, பெண்ணின் பெற்றோர் வீட்டிற்கு அருகிலேயே அமைந்திருந்த நிலையில், ராகுலின் மாமியார் மகளை காண அடிக்கடி வந்து சென்று இருக்கிறார்.
நாட்கள் செல்ல செல்ல, மருமகனின் மீது ஆசையை வளர்த்து கொண்ட மாமியார், மகள் கல்லூரிக்கு சென்ற பிறகு, தனிமையை பயன்படுத்தி எல்லை மீறும் விதத்தில் தொட்டு பேசி இருக்கிறார். மனைவிக்கு துரோகம் செய்ய நினைக்காத ராகுலோ, மாமியாரின் தொல்லை தாங்காமல் நண்பன் வீட்டிற்கு சென்று நேரம் செலவிடுவதை வழக்கமாக்கி கொண்டு இருக்கிறார்.
என்றாலும் விடாத மாமியார், வீடியோ கால் மூலமாக ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. இதனால் பொறுமை இழந்த ராகுல், தனது மாமியாரின் நடத்தையை மனைவியிடம் கூற, தாயாரை கடுமையாக எச்சரித்து இருக்கிறார் அந்த இளம்பெண்.
இருந்தபோதிலும் மாமியாரின் தொல்லைகள் தொடர, ராகுலும் அவரது மனைவியும் அனந்தபூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனால் மாமியாரும் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார்.
Social Plugin