Ad Code

Responsive Advertisement

அசந்த நேரத்தில் ஆப்படித்த திரிஷா...! அதிர்ச்சியில் அனுஸ்கா..!


நடிகை அனுஷ்கா உடல் எடை கூடி படவாய்ப்புகளை இழந்து பெரும் சங்கடங்களுக்கு பிறகு மெலிந்த உடலுடன் மீண்டும் நடிக்க கிளம்பி இருக்கிறார்.

இப்படி ஒரு சூழ்நிலையிலும் அவர் வீம்பு பிடித்தது அவருக்கே வினையாக முடிந்து இருக்கிறது. மணிரத்னம் அவர்கள் இயக்கத்தில் வரலாற்று சிறப்பு மிக்க திரைப்படமாக பொன்னியின் செல்வன் உருவாகி வருகிறது.

நயன்தாரா, விக்ரம், ஐஸ்வர்யா, அமிதாப், ஜெயம் ரவி, கார்த்தி, கீர்த்தி என மாபெரும் நட்சத்திர பட்டாளமே கூடி இருக்கும் இத்திரைப்படத்தில் நடிகை அனுஸ்காவையும் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தது.

அதற்காக அவரை அணுகியபோது, மார்க்கெட் சரிந்து கிடக்கும் இந்த வேளையிலும் 4 கோடி சம்பளம் கேட்டு தயாரிப்பாளருக்கு குண்டை தூக்கி போட்டாராம்.

1.5 கோடி வேண்டுமானால் தருகிறோம் என படக்குழு கூறியதை ஒப்புக்கொள்ளாமல் அவர் கறார் காட்ட, 'திரிஷாவை நடிக்க வைக்கலாமா' என ஆலோசனை நடந்து இருக்கிறது.

இதனை அறிந்த நடிகை திரிஷா 'சம்பளம் பற்றி கவலை இல்லை, இப்படியொரு படத்தில் வாய்ப்பு கிடைப்பது எனக்கு பெருமை' என தாராளம் காட்ட, அனுஸ்கா நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் திரிஷாவை நடிக்க வைக்க இருக்கிறது பொன்னியின் செல்வன் படக்குழு.