Ad Code

Responsive Advertisement

புல் போதையில் நடிகையும் நடிகையும் சில்மிஷம்..! அரண்டு போன திரையுலகம்


தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளாக வலம் வந்தவர்கள் இந்த அழகு புதுமைகள். தற்பொழுது மார்க்கெட் டல்லடித்து விட்டாலும் ஓரிரு படங்கள் நடித்து தங்களது ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகின்றனர்.

திரைத்துறையில் ஒருவருக்கொருவர் போட்டியாக இருந்தாலும், நிஜ வாழ்வில் நெருங்கிய தோழிகள் இந்த நடிகைகள். எந்த அளவுக்கு நட்பு என்றால் நான் ஆணாக பிறந்திருந்தால், இவரை தான் திருமணம் செய்து கொள்வேன் என கூறும் அளவுக்கு இருவருக்குமிடையே நெருக்கம்.

இந்நிலையில் வழக்கம் போல சரக்கு பார்ட்டி ஒன்றில் ஒருவரை ஒருவர் நடிகைகள் சந்தித்து கொண்டு, நடக்க முடியாத அளவுக்கு போதையில் உச்சம் தொட்டு இருக்கின்றனர். 

இதனால் என்ன நடக்கிறது என்றும் தெரியாமல் ஒருவருக்கொருவர் உதட்டில் முத்தம் கொடுத்து கொண்டிருக்கின்றனர். பின்னர் விபரீதம் அறிந்து விரைந்து வந்த நடிகைகளின் ஓட்டுநர் போதையில் தள்ளாடிய இருவரையும் குண்டுக்கட்டாக தூக்கி சென்று இருக்கிறார்.

இந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் காட்டு தீயை போல பரவ, வழக்கத்திற்கு மாறாக இந்த கூத்து இருக்கே என தலையில் அடித்து கொண்டிருக்கின்றனர்.