Ad Code

Responsive Advertisement

மார்க்கெட்டே இல்லைனாலும் பந்தாவுக்கு குறைச்சல் இல்ல...! நடிகையை திட்டி தீர்க்கும் தயாரிப்பாளர்கள்


தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இந்த நடிகை. அழகில் மட்டுமல்லாது நடிப்பு திறமையிலும் ரசிகர்கள் திரைத்துறையினரை கவர்ந்தவர் இன்று படவாய்ப்புகளை இழந்து தவித்து வருகிறார்.

உடல் எடை கூடி குறைக்கமுடியாமல் அவதிப்பட்டதே படவாய்ப்புகள் பறிபோக காரணமாக அமைந்தது. இந்நிலையில் மாபெரும் பட்ஜெட்டில் உருவாக இருக்கும் திரைப்படம் ஒன்றில் நடிக்க வைக்க படக்குழு அவரை தொடர்பு கொண்டது.

முன்பு போல இப்பொழுது மார்க்கெட் இல்லை என்ற நிலையிலும், 'கதைக்கு பொருத்தமாக இருப்பார்'  என படக்குழு அவரை தேர்வு செய்து இருந்தது. ஆனால் நடிகையோ லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு இணையாக சம்பளம் கேட்க, கால் பிடதியில் அடிக்காத குறையாக ஓட்டம் பிடித்து இருக்கின்றனர் படக்குழுவினர்.

இந்த படம் மற்றுமின்றி தனக்கு வருகிற ஒவ்வொரு படவாய்ப்புக்கும் இப்படியொரு பிரமாண்ட சம்பளம் கேட்டு, பத்து பைசா குறைக்க மாட்டேன் என கறார் காட்டுவதால், 'வாய்ப்பு இல்லையென்றாலும் இந்த பந்தாவுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை' என நடிகையை திட்டியவரே செல்கின்றனராம் அவரை புக் செய்ய வந்தவர்கள்.