Ad Code

Responsive Advertisement

கோடில சம்பளம் வாங்குவோம்! தொழிலாளிகளுக்கு சம்பளம் கொடுக்க மாட்டோம்... சிக்கன சிகாமணி நடிகர்கள்


திரைத்துறையில் கோடிகளில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்கள் பலர் 10000, 20000 என வழங்கும் சம்பளத்திலும் பாக்கி வைத்து ஏழை தொழிலாளிகளின் வயிற்றில் அடிக்கும் சம்பவங்கள் வாடிக்கையாகி வருகின்றன.

முன்னதாக திரைத்துறையில் படு பிசியாக நடித்து கொண்டிருக்கும் காமெடி நடிகர் ஒருவர், தனது ஓட்டுனருக்கு பல மாதங்களாக சம்பளம் கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார்.

கிட்டத்தட்ட லட்சங்களில் சம்பள பாக்கி இருந்தும் கொடுக்காமல் இருந்த நிலையில், ஓட்டுநர் திரையுலகில் முக்கிய புள்ளிகளிடம் புகார் அளித்த பிறகே சம்பளம் வந்தது.

இதுபோல தற்பொழுது தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும், இரண்டாம் கட்ட முன்னணி நடிகர் ஒருவர், தனது அலுவலகத்தில் காவலாளிகளாக பணிபுரிந்தோருக்கு, 4 மாத சம்பளமான 40000 ரூபாய் அளிக்காமல் இருந்ததோடு அவர்களை வேலையை விட்டும் நீக்கி இருந்திருக்கிறார்.

இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, தேடி பிடித்து கொடுக்கப்பட்டு இருக்கிறது சம்பளம். இப்படி கோடிக்கணக்கில் சம்பளம் பெரும் நடிகர்கள், 5000,6000 என மலிவான சம்பளத்திற்கு வேலை செய்யும் தொழிலார்களின் வயிற்றில் அடிப்பதெல்லாம் கொடூரம் என புலம்பி வருகிறது திரையுலகம்.