Ad Code

Responsive Advertisement

'முன்னாள்' காதலுக்கு கண்ணு இல்ல..! காதலிக்காக லட்சங்ககளில் சொச்சம் பெற்ற சர்ச்சை நடிகர்..


முன்னாள் காதலிக்காக தனது சம்பளத்தை லட்சங்களில் குறைத்து இருக்கிறாராம் சர்ச்சை நடிகர்.

தன் பட படப்பிடிப்புகளுக்கே டிமிக்கி கொடுத்து பெயரை கெடுத்து கொண்டவர் இந்த சர்ச்சை நடிகர். திரும்பி வந்துவிட்டேன் என பில்டப்பெல்லாம் போட்டு புஷ்வாணமானவர், தன் காதலி படத்துக்காக வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தன் பல காதல் சர்ச்சைகளில் ஒரு காதலாக, நடிகர் இளம் நாயகியை காதலித்து வந்த நிலையில், வழக்கம் போல டாட்டா காட்டி சென்றார் காதலி. தற்பொழுது அந்த நடிகை தன் முன்னாள் காதலியாகிவிட்ட நிலையிலும்,

தன் பட படப்பிடிப்புக்கே ஒழுங்காக செல்லாதவர், முன்னாள் காதலி அழைப்பு விடுத்த காரணத்துக்காக, தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை பிசுறு தட்டாமல் நடித்து கொடுத்தார்.

வழக்கமாக 5 கோடிக்கும் மேல் சம்பளம் பெரும் நம் நடிகர், முன்னாள் காதலியின் வார்த்தைக்காக லட்சங்களில் சொச்சம் பெற்று தயாரிப்பாளர்கள் பலரை வயிறெரிய செய்து இருக்கிறார்.