Ad Code

Responsive Advertisement

காசு கொடுங்க நடிக்கிறேன்...! சேவைலாம் செய்ய முடியாது... முன்னணி நடிகர் கறார்


தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் நன்மதிப்பை கொண்ட ஒரு நடிகர், பொது சேவையிலும் கறார் காட்டியது திரையுலகினரை அதிர வைத்து இருக்கிறது.

'நடிப்பில் இவரை அடித்து கொள்ள ஆள் இல்லை' என அடித்துக்கொள்ளும் அளவுக்கு, சினிமாத்துறையில் தன் திறமையினால் உச்சத்தில் இருக்கிறார் இந்த நடிகர்.

மேலும் பொது நிகழ்வுகளில் இவர் ரசிகர்களை மதிக்கும் விதம், பார்ப்பவர்களை, 'செம மனுஷன்யா' என புகழவைத்திருக்கிறது. ஆனால் இப்படி பட்ட நடிகரின் மறுபக்கம் திரைத்துறையினரையே அதிர வைத்து இருக்கிறது.

பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நலிவுற்ற தமிழக விளையாட்டு வீராங்கனைகளை வெளியுலகுக்கு தெரிவிக்கும் அற்புதமான நிகழ்ச்சி ஒளிபரப்பானது.  இதற்கு குறிப்பிட்ட 'நடிகர் குரல் கொடுத்து வீடியோ வெளியிட்டால் நன்றாக இருக்கும்' என அந்நிகழ்ச்சியை ஒளிபரப்பிய டிவி சேனல் விரும்பியது.

இதற்காக அவரையும் தொடர்புகொண்டு பேசியவர்கள், 'ஒரு நிமிடம் இந்நிகழ்ச்சி பற்றி பேசி கொடுங்கள், கஷ்டப்படும் நம் மாநில விளையாட்டு வீரர்களுக்கு இது பேருதவியாக இருக்கும்' என வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த வேண்டுகோளுக்கு பதிலளித்து நடிகரோ, வழக்கமான விளம்பர படங்கள் போல லட்சங்களில் பணம் கேட்டதுடன், 'சமூக சேவை செய்ய எனக்கு விருப்பம் இல்லை, கேட்ட காசு கிடைத்தால் கண்டிப்பாக பண்ணிரலாம்'.. என கறார் காட்ட அன்று முதல் எவரும் சமூக சேவைகளுக்காக அவரை அணுகுவது இல்லையாம்.

இந்த தகவலை பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் தங்களது யூட்யூப் சேனலில் தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தத்தக்கது.