Ad Code

Responsive Advertisement

'விஜய்' மாதிரி ரசிகர்களை அடிவாங்க விடமாட்டார் தல...! அஜித்தை புகழும் ரசிகர்கள்


பிகில் திரைப்பட இசைவெளியீட்டு விழாவை காட்டிலும் அதில் அடிவாங்கிய ரசிகர்களை பற்றியே பரவலாக பேசப்பட்டு வருகிறது.

10000 இருக்கைகள் உள்ள அரங்கில் 20000 பேர் குவிந்த காரணத்தினால் ரசிகர்களை தடியடி நடத்தி வெளியே துரத்தினர் சென்னை போலீசார். இதனால் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னை வந்த ரசிகர்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இந்த சூழ்நிலை குறித்து பேசி வரும் அஜித் ரசிகர்கள் சிலர், 'இப்படியொரு சூழ்நிலைக்கு ரசிகர்களை ஆளாக்கி விடக்கூடாது' என்ற காரணத்தினாலேயே எங்கள் தல இது போன்ற நிகழ்ச்சிகளை தவிர்த்து வருகிறார். உண்மையில் அஜித் சார் கிரேட்' என ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.