வம்பு நடிகர் 'ஷூட்டிங்கிற்கெல்லாம் இனி ஒழுங்கா வருவார், பாருங்கள் ஜிம்முக்கு போய் உடல் எடையை எல்லாம் குறைச்சிருக்காரு' என அவரை புதிய ஒப்பந்தம் செய்ய வந்த தயாரிப்பாளர்கள் எல்லாம் தலைதெறித்து ஓட வைத்து விட்டது நடிகரின் சமீபத்திய நடவடிக்கை.
நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு சில படங்கள் பிரச்சனை இல்லாமல் நடித்து கொடுத்தவர், வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக தான் ஒப்பந்தமான படத்திற்கு கால்ஷீட் கொடுக்காமலேயே டிமிக்கி கொடுத்து வந்தார்.
இதனால் கடுப்பான தயாரிப்பாளர், படத்திலிருந்து அவரை நீக்கி விட, வம்பு நடிகருக்காக தான் பார்த்து பார்த்து செதுக்கிய கதை இப்படி போச்சே என புலம்பிய அஜித் பட இயக்குனர்,
வேறு ஒரு நடிகரை வம்புவுக்கு பதிலாக ஒப்பந்தம் செய்து, திரைக்கதையை மேலும் பக்காவாக மாற்றியமைத்து, 'இப்படியொரு வெற்றி படத்தை தவற விட்டுவிட்டோமே' என வம்புவை புலம்ப வைத்து பழிதீர்க்க பயங்கரமாக உழைத்து வருகிறாராம்.
Social Plugin