PUBG (பப்ஜி) எனும் ஆன்லைன் மொபைல் வீடியோ கேமினால் இளைஞர்கள் பலர் உயிரிழக்கும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.
முன்னதாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் பல மாதங்கள் தொடர்ந்து பப்ஜி விளையாடியதன் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இது போல பல விபரீதங்கள் அளவுக்கு மீறிய பப்ஜி விளையாட்டினால் நிகழ்ந்துள்ள நிலையில், தற்பொழுது இன்னொரு இளைஞரும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஹைதராபாத்தை சேர்ந்த 19வயது கல்லூரி மாணவர் ஒருவர்,
திடீரென கைகால்களை அசைக்க முடியவில்லை என பெற்றோரிடம் தெரிவித்து இருக்கிறார்.
இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளைஞரை பரிசோதித்த மருத்துவர்கள், மூளையில் ஏற்பட்டுள்ள ரத்தத்தடையால் பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் ஓய்வின்றி தொடர்ந்து PUBG (பப்ஜி) விளையாடியதே இந்த திடீர் பக்கவாதத்திற்கு காரணம் எனவும் தெரிவித்தனர். இது குறித்து பேசிய பாதிக்கப்பட்ட இளைஞரின் பெற்றோர், 'எங்கள் பேச்சை கேட்காமல் தண்ணீர், உணவு இன்றி தொடர்ந்து 10 மணி நேரங்கள் கூட இந்த கேமை விளையாடியதே எங்கள் மகனின் இந்த நிலைமைக்கு காரணம்.
இப்படி இளைஞர்களை அடிமையாக்கும் விளையாட்டுகளை அரசு தடை செய்யவேண்டும். இளைஞர்கள் இது போன்ற விளையாட்டுகளை தவிர்த்து வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டும்' என தெரிவித்தனர்.
Social Plugin