பார்த்திபன் தனி ஆளாக இயக்கி நடித்த ஒத்த செருப்பு திரைப்படதிற்கு உலக அளவில் மாபெரும் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இந்திய சினிமா வராலாற்றிலேயே ஒரு இயக்குனர், தனி ஆளாக நடித்து வெளிவந்த 'ஒத்த செருப்பு', முற்றிலும் வித்தியாசமான திரைப்படமாக உருவானது.
வித்யாசம் மட்டும் இன்றி விறுவிறுப்புக்கும் பஞ்சம் இன்றி இருந்த காரணத்தினால், ரசிகர்களின் பேராதரவையும் பாராட்டையும் பெற்ற, இப்படியொரு வரலாற்று சிறப்பு மிக்க திரைப்படத்திற்கு மேலும் பெருமை சேர்த்து இருக்கிறது உலக பிரபல இணையதளம் ஒன்று.
உலக சினிமாவை ரசிகர்களின் பார்வையில் வகைப்படுத்தும், IMDB இணையதளம், 'ஒத்த செருப்பு'க்கு 10க்கு 9.5 மதிப்பெண்கள் கொடுத்து கௌரவித்து இருக்கிறது. இது குறித்து கேள்வி பட்ட நடிகர் பார்த்திபன் தனது மகிழ்ச்சியை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கிறார்.
— R.Parthiban (@rparthiepan) September 25, 2019
Social Plugin