Ad Code

Responsive Advertisement

கோவிலுக்குள் குடித்து விட்டு சென்ற கார்த்தி பட நடிகைகள்...? அடித்து துரத்திய மக்கள்


இந்துக்கள் மட்டுமின்றி, பிறரது இறை நம்பிக்கைகளை மதிக்கும் ஒவ்வொருவராலும் புனிதமான இடமாக பார்க்கப்படுவது கோவில்கள். அப்படிப்பட்ட புனித தளத்துக்குள்  படப்பிடிப்பு நடத்திய படக்குழுவினர் மக்களால் அடித்து துரத்தப்பட்டு இருக்கின்றனர்.

திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு 'பாக்யராஜ் கண்ணன்' இயக்கத்தில் 'கார்த்தி' நடக்கும் 'சுல்தான்' திரைப்பட படப்பிடிப்புகள் அனுமதியுடன் நடைபெற்று இருக்கிறது.

என்றாலும், 'இந்து கோவிலில் ஒரு இஸ்லாமிய மன்னனின் கதையை படமாக எடுப்பதா?'' என இந்து முன்னணி சார்பில் அப்பகுதி மக்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர்.


என்றாலும் எதையும் கண்டு கொள்ளாது படப்பிடிப்புகள் தொடர்ந்து இருக்கிறது. இந்நிலையில் படப்பிடிப்பில் பெண் ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் சிலர்  மது அருந்தி படப்பிடிப்புக்கு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மேலும் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், இந்து முன்னணியினர் படக்குழுவினரை ஓட ஓட விரட்டி அடித்தனர். இதனால் நடிகர் கார்த்தி உள்ளிட்ட பல பிரபலங்கள், கோவிலின் பின்புறமாக அலறி அடித்து ஓடிய கொடூரமும் அங்கு நிகழ்ந்தேறி இருக்கிறது.