'அந்நியன், அருந்ததி' படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த திவ்யா நாகேசின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்நியன் படத்தில் நடிகர் விக்ரமின் குட்டி தங்கையாகவும், அருந்ததி திரைப்படத்தில் சிறு வயது அனுஷ்காவாகவும் நடித்து பிரபலமானவர். அதில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததற்காக குழந்தை நட்சத்திரத்திற்கான நந்தி விருதையும் வாங்கி இருந்தார்.
இவை தவிர சுட்டி டிவியில் நடன நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று பிரபலமான இவர் நாயகியாகவும் அவதாரம் எடுத்து இருக்கிறார். கடந்த 2016ம் ஆண்டு வெளியான மேற்கு முகப்பேர் கனக துர்கா திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்த நிலையில் அத்திரைப்பட புகைப்படங்கள் தற்சமயம் வெளியாகி அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
Social Plugin