தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் தமிழ் ராக்கர்ஸுக்கு பின் மிகுந்த கோபத்தில் இருப்பது என்றால் அது நம் 'ப்ளூ சட்டை மாறன்' என அழைக்கப்படும் யூட்யூப் திரைப்பட விமர்சகர் தான்.
என்னதான் கஷ்ட்டப்பட்டு படம் எடுத்தாலும், இது நொட்டை, அது நொசுக்கு என குறை கண்டுபிடித்து விமர்சனம் செய்யும் இவரிடம் பாசிட்டிவ் விமர்சனம் பெற்ற படங்களை விறல் விட்டு எண்ணி விடலாம்.
இப்படி இருக்க அவரே முதன் முறையாக திரைப்பட இயக்குனராக களம் காண இருக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் ப்ளூ சட்டை மாறன் இயக்க இருக்கும், வரலாற்று சிறப்பு மிக்க திரைப்படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது.
இந்த தகவலை அறிந்து மாபெரும் எதிர்பார்ப்புடன் வாங்கியதை திருப்பி கொடுக்கும் ஆர்வத்தில் இவரது இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள்.
Social Plugin