ஒட்டுமொத்த இந்திய திரையுலகே மெச்சும் ஒரு நடிகர் உலகநாயகன் கமல் ஹாசன். இவரது இளைய மகள் அக்சரா ஹாசன், சினிமா வாய்ப்புகள் இல்லாத நிலையில், தற்பொழுது வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க துவங்கி இருக்கிறார்.
அறிமுகமான அஜித்தின் விவேகம் திரைப்படத்திலேயே தனக்கு நல்ல பிரேக் கிடைக்கும் என எண்ணி இருந்த அக்சராவுக்கு கிடைத்தது என்னமோ அதிர்ச்சிதான். படமும் சரியாக செல்லவில்லை, எதிர்பார்த்த படவாய்ப்புகளும் வரவில்லை, வெளியிட்ட அந்தரங்க புகைப்படங்களும் கைகொடுக்க வில்லை என்கிற காரணங்களினால் வேறு வழி இன்றி சின்னத்திரை நோக்கி சென்றிருக்கிறார்.
'குட் பாய் கேர்ள்' என்கிற இணைய தொடரில் நாயகியாக இணைந்திருக்கும் இவர், 'இதில் தனக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்' என ஆணித்தனமாக நம்பி காத்திருக்கிறாராம்.
Social Plugin